இலங்கையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்!!

2536


பாடசாலைகளை திறப்பது தொடர்பில்..


இலங்கையில் மீண்டும் பாடசாலைகளை திறப்பதை தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட நோயெதிர்ப்பு பிரிவு பேராசிரியர் நீலிகா மலவிகே கூறியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பெரும்பாலான மேற்குலக நாடுகளில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரிக்கின்ற போதிலும், பாடசாலைகள் திறக்கப்பட்டன.


எனினும், இலங்கை உள்ளிட்ட 23 நாடுகள் மாத்திரமே, மே மாதம் முதல் பாடசாலைகளை மூடியுள்ளன. அடுத்த ஜனவரி வரை குழந்தைகளை வீட்டில் வைத்திருக்க பெற்றோர்கள் ஒப்புக்கொள்வார்களா எனவும் அவர் வினவியுள்ளார்.


யுனிசெப் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஹென்ரிடா போ மற்றும் யுனேஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒடி அசோலே ஆகியோரை மேற்கோள்காட்டி அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.