கொரோனா தொற்றுக்கு இலக்காகி மூன்றரை வயது குழந்தை பலி!!

1138


கொரோனா..


அம்பலாங்கொடை – தேவகொட பிரதேசத்தை சேர்ந்த மூன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு உயிரிழந்த குழந்தை லுகேமியா நோயால் பீடிக்கப்பட்டு அவதியுற்று வந்துள்ளதாகவும், கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதற்கமைய,காலி, தடெல்ல தகன மேடையில் குழந்தையின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் பல சிறார்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.