உலக நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த இலங்கை!!

1706

தடுப்பூசி..

தடுப்பூசி போடுவதில் ஏனைய நாடுகளை பின்னுக்குத்தள்ளி கடந்த வாரம் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராயும்,

Our World in Data இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த வாரம் அதிக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்திய நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் 13 சதவிகிதம் பேருக்கு கடந்த வாரம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது என World in Data-வின் தலைவர் தனது டுவிட்டர் கணக்கு மூலம் சுட்டிக்காட்டினார்.