இலங்கையின் முதலிடத்தை பறித்த இந்திய அணி!!

504

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தரப்படுதலில் இலங்கை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இத்தரப்படுத்தலில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளதுடன், பாகிஸ்தான் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்லாந்து, அயர்லாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஸிம்பாப்வே, ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

நீண்ட காலங்களாக T20 தரவரிசையில் முதலிடத்தில் நீடித்த இலங்கை அணி தற்போது இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

T20