ரஜினியின் வாழ்க்கை விரைவில் திரைப்படமாக!!

507

Rajani

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாவது என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் ரஜினியின் வாழ்க்கை விரைவில் திரைப்படமாக இருக்கிறது.

இதில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் நடிக்கிறார். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல வில்லன் நடிகர் ஆவர். தமிழில் வில்லு, பில்லா, அசல், சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படத்தை பைசல்பை என்பவர் இயக்குகிறார். வர்ஷா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கு ஹிந்தியில் மை ஹோ ரஜினிகாந்த் என்றும் தமிழில் நானே ரஜினிகாந்த் என்றும், பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர். ரஜினி தனது வாழ்க்கையை பஸ் நடத்துனராக தொடங்கியது முதல் சினிமாவில் சாதித்து ஆன்மீகத்தில் ஈடுபட்டது வரை அனைத்து அம்சங்களும் படத்தில் இடம்பெறுகிறதாம்.

ரஜினி வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அபூர்வமான அரிய வாய்ப்பு என்றார் ஆதித்யா மேனன். இந்த படத்தை ரஜினிக்கு அர்ப்பணிப்பதாக இயக்குனரும் தயாரிப்பாளரும் தெரிவித்தனர்.