கறுப்பு பூஞ்சை நோயில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் : ஆபத்தான நிலைமையில் ஒருவர்!!

1631


கறுப்பு பூஞ்சை..



இலங்கையில் இதுவரையில் கறுப்பு பூஞ்சை நோயில் பாதிக்கப்பட்டுள்ள சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொவிட் தொற்றிற்கு நேரடி தொடர்பு இல்லை என்ற போதிலும்,



நீண்ட காலங்கள் முகக் கவசம் அணிந்திருப்பதன் காரணமாக இலங்கையினுள் கறுப்பு பூஞ்சை தொற்று பரவும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




தற்போது கறுப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு சிறுநீரக நோய் தொடர்பான பாதிப்புகள் உள்ளமையினால் அவர் ஆபத்தான நிலைமையில் உள்ளார் என தெரியவந்துள்ளது.


அந்த நோயாளியின் மூக்கின் உட்புறத்திலும் ஒரு கண்ணிலும் கறுப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் கொவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவராகும். மேலும் சில நோயாளிகள் சிகிச்சை பெற்ற வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கறுப்பு பூஞ்சை தொடர்பில் இதற்கு முன்னர் இந்தியாவின் பிராந்தியங்கள் சிலவற்றிலேயே தகவல் வெளியாகியிருந்தது. நீண்ட காலங்கள் முகக் கவசம் அணிதல், ஒரே முகக் கவசத்தை அணிதல் மற்றும் சுத்தமற்ற முகக் கவசங்களை அணிதல் காரணமாக இந்த தொற்று ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


கறுப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் உள்ளார்கள் எனவும் அவர்கள் நீண்ட காலமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.