வவுனியாவில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

1288


கொரோனா..


வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக நேற்று (13.09) 04 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 04 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.


வைரவப்புளியங்குளம் (வயது 80), குட்சைட் வீதி (வயது 62), பாரதிபுரம் (வயது 30), பம்பைமடு (வயது 70) ஆகிய பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றால் மரணித்தவர்களாவார்கள்.


இந்நிலையில் மரணித்த 4 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.