ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுல்படுத்தப்படுமா? அமைச்சர் இன்று வெளியிட்ட தகவல்!!

1905

ஊரடங்கு..

எதிர்வரும் வாரம் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் விளைவாக கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கோவிட் பணிக்குழு பரிசீலனை செய்த பின்னரே இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4.00 மணிவரை ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.