வவுனியாவில் பிரதேச சபைகளுக்கு பொது சுகாதர பரிசோதகர்களை நியமிக்க கோரி கவனயீப்பு போராட்டம்!!

1133

V2

வட மாகாணத்தில் உள்ள பிரதேச சபைகளுக்கு பொது சுகாதார பரிசோதகர்ளை நியமிக்க கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு முன்பாக சபையின் தலைவர் க.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் வட மாகாணத்தில் உள்ள 3 பிரதேச சபைகளில் பணியாற்றிய பொது சுகாதார பரிசோதகர்களை இடமாற்றியுள்ளமையை கண்டித்தும் அதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாகவும் இப்போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.