இங்கிலாந்திற்கு அதிர்ச்சியளித்த நெதர்லாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி!!

280

Netherlands

T20 உலக கிண்ணத் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிட்டகொங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை எடுத்து இங்கிலாந்து அணிக்கு 134 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயம் செய்தது.

இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை எடுத்து 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இவ் வெற்றியின் மூலம் சர்வதேச முதல்தர அந்தஸ்து பெற்ற அணி ஒன்றை முதல் முறையாக வீழ்த்தி நெதர்லாந்து அணி தனது கன்னி வெற்றியை பதிவு செய்தது.