வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் இயற்கைவழி இயக்கம் நடாத்தும் இளம் புகைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டம்!!

988

கிளைமதோன் வவுனியா..

கிளைமதோன் வவுனியா எனும் தொனிப்பொருளில் நகரங்களை அடிப்படையாக கொண்டு உலகளவில் நடாத்தப்படும் போட்டி நிகழ்வாகும். இவ் நிகழ்வினை வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் இயற்கைவழி இயக்கம் இணைந்து நடாத்துகின்றார்கள்.

இவ் வருடம் கிளைமதோன் வவுனியாவானது இளம் புகைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக காலநிலை மாற்றம் மற்றும் அதற்கான தீர்வுகளை புகைப்படத்தினூடாக பதிவு செய்ய உள்ளனர்.

மேலும் போட்டியில் சிறந்த புகைப்பட கலைஞராக ஒரு வெற்றியாளரும் பிரபலமான போட்டியாளராக ஒரு வெற்றியாளராக ஒருவரும் தெரிவு செய்யபடுவார்கள்.

போட்டிக்கான பதிவுகளை செப்டம்பர் 12 முதல் ஒக்டோபர் 10 வரை மேற்கொள்ள முடியும் என்பதுடன் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பற்றலாம்

புகைப்படங்களை 1024 பிக்சல்கள் மற்றும் jpeg வடிவில் இருந்தல் அவசியம் என்பதுடன் மேலதிக தொடர்புகளுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை (https://climathon.climate-kic.org/asia/sri-lanka/vavuniya/?lang=en) பார்வையிடுவதன் மூலம் பெற்று கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.