வவுனியாவில் வர்த்தக சங்கத்தின் முயற்சி தேவையற்றது என விமர்சித்தவர்களினால் மாவட்டத்திற்கு இந்த நிலமை : சுந்தரலிங்கம் காண்டீபன்!!

2087

சுந்தரலிங்கம் காண்டீபன்..

வவுனியா மாவட்டத்திற்கு பி.சீ.ஆர் இயந்திரம் கொள்வனவு செய்வதற்குறிய நடவடிக்கையினை தேவையற்றது என விமர்சித்ததுடன் தங்களால் முடியும் என உறுதிமொழி சொல்லில் மாத்திரம் வழங்கியவர்களினால் மாவட்டத்தில் தற்போது இந்த நிலமை உருவாகியுள்ளதாக வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் ,

இன்று வரை பி.சி.ஆர் இயந்திரத்தை வவுனியாவிற்கு வரவழைக்க முடியாமல் தடுமாறும் நிலை கண்டு நாம் வெட்கி தலைகுனிய வேண்டும்.

வவுனியா வர்த்தக சங்கம் மேற்கொண்ட முயற்சி தேவையற்றது என விமர்சித்தவர்கள் தங்களால் முடியும் என்று சொன்னவர்களின் உறுதிமொழி சொல்லில் மட்டுமே உள்ளது .

அன்று வவுனியா வர்த்தக சங்கம் மேற்கொண்ட முயற்சிக்கு ஊக்கம் அளித்து இருந்தால் வவுனியாவின் மோசமான நிலைமையை சற்று குறைத்திருக்க முடியும்.

அத்துடன் அரச வைத்தியசாலைகளின் பௌதீக வளங்களில் ஆளும் தரப்பு அக்கறை கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மாவட்டத்தில் பி.சீ.ஆர் இயந்திரம் இன்மையினால் மரணமடைபவர்கள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகள் இரண்டு அல்லது மூன்று நாட்களின் பின்னரே கிடைக்கப்பெறுகின்றன.

அதனையடுத்து வவுனியா வர்த்தக சங்கத்தினர் மூன்று மணிநேரத்தினுள் பி.சீ.ஆர் பெறுபேற்றினை பெற்றுக்கொள்ளக்கூடிய பி.சீ.ஆர் இயந்திரம் ஒன்றினை கொள்வனவு செய்வதற்குறிய அனைத்து நடவடிக்கையினையும் மேற்கொண்டதுடன்,

மாவட்ட வர்த்தகர்கள் மூலம் நிதியும் ஒழுங்கு செய்திருந்தமையுடன் சில அழுத்தங்கள் காரணமாக அச் செயற்பாட்டினை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.