வவுனியாவில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 116ஆவது பிறந்ததின நிகழ்வு!!

580

Selva

தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழர்களால் மிகவும் போற்றப்படும் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 116ஆவது சிரார்த்த தினம் நேற்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலைக்கருகில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களும், பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் காலை 6 மணிக்கு இறம்பைக்குளம் அந்தோனியர் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் மதியம் 12 மணிக்கு வவுனியா குருமன்காடு காளிகோவிலில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.