வவுனியா ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழகத்தின் மைதான புனரமைப்பிற்கு கோவில்குளம் இளைஞர் கழகத்தினால் நிதியுதவி!!(படங்கள்)

329

வவுனியா ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழகத்தின் மைதான புனரமைப்பு மற்றும் கழக நடவடிக்கைகளுக்காக புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா நகர சபை உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களினால் ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழகத்தின் தலைவரிடம் ரூபா 35 000/- பெறுமதியான காசோலை அன்பளிப்பு செய்யபட்டது.

மேற்படி நிகழ்வு நேற்று (31.03) மாலை கோவில்குளம் இளைஞர் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா நகர சபை உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திரு சேகர், கோவில்குளம் இளைஞர் கழக ஆலோசகர் திரு எம்.கண்ணதாசன், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் செயலாளர் ஜனார்த்தனன், இணைப்பாளர் காண்டீபன் , தொழில்நுட்ப பிரிவின் சதீஸ்,நிகேதன் கல்வி குழுவின் செல்வம், உறுப்பினர்களான அகிலன், சசி, பாலா, நவநீதன், சுகந்தன் ஆகியோரும், ரொக்கற் விளையாட்டு கழகத்தின் தலைவர் செல்வம், செயலாளர் மோகன், ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழகத்தின் தலைவர் பிரசாத், உப செயலாளர் பிரகாஷ் உறுப்பினர்களான ஜோன்சன், தயாபரன், டிலச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4