அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

1134


அத்தியாவசிய பொருட்கள்..


பால் மா, சமையல் எரிவாயு, அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரான பெருந்தோட்ட தொழில் துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.எனினும் உலக சந்தையில் காணப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு விநியோகம் தொடர்பான நெருக்கடி, இலங்கைக்குள் டொலரின் விலை அதிகரிப்பு என்பன காரணமாக எதிர்காலத்தில் சில தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.