வவுனியா நொச்சிகுளத்தில் இடம்பெற்ற ஆலய கும்பாபிசேகத்த்தால் கிராமம் அபாய கட்டத்தில் : தொற்றாளர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு!!

1504

நொச்சிகுளத்தில்..

சுகாதார விதிமுறைகளை மீறி ஆலய கும்பாபிசேகம் இடம்பெற்ற ஓமந்தை, நொச்சிகுளம் கிராமத்தில் கோவிட் தொற்றாளர்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அபாய நிலையில் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, நொச்சிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி இடம்பெற்ற குப்பாபிசேக நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேர் கோவிட் தொற்றாளர்களாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இனங்காணப்பட்டனர்.

இதனையடுத்து குறித்த 13 தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஆலயம் மற்றும் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகிய நிலையில் மேலும் 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் சுமார் 100 பேர் வரையிலேயே வசித்து வரும் நிலையில், 38 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்னர். இதனால் கோவிட் அச்சுறுத்தல் மிக்கதாக குறித்த கிராமம் மாறியுள்ளதால் மக்கள் சுகாதார நடைமுறைகளை பேணி அவதானமாக இருக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.