வவுனியா – மன்னார் வீதியில் பிரபல சுப்பர் மார்க்கட் தனிமைப்படுத்தப்பட்டது!!

2658


மன்னார் வீதியில்..


சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதாக வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள பிரபல சுப்பர் மாக்கட் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.கொவிட் பரவல் வவுனியாவில் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது செயற்படல்,


உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியா – மன்னார் வீதியில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றினை சுகாதாரப் பிரிவினர் இன்று (23.09) முன்னெடுத்திருந்தனர்.


இதன்போது, வவுனியா – மன்னார் வீதியின் வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுப்பர் மார்க்கட் ஒன்று சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களை ஒன்றி கூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டமை சுகாதாரப் பிரிவினரால் அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த சுப்பர் மாக்கட் சுகாதாரப் பிரிவினரால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டது.