திருமணமான சில மாதத்தில்இறந்த கணவன் : அவர் சகோதரரை மறுமணம் செய்து கொண்ட மனைவிக்கு சில நாட்களில் காத்திருந்த அதிர்ச்சி!!

1045


தமிழகத்தில்..


தமிழகத்தில் லட்சக்கணக்கிலான பணம் மற்றும் நகைக்காக அண்ணன் மனைவியை தம்பி திருமணம் செய்த நிலையில் அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதன் அதிர்ச்சி பின்னணி அம்பலமாகியுள்ளது.மதுரையை சேர்ந்த தலையாரி பாண்டி மகன் பிரபாகரன் என்பவருக்கும் கல்லூரி மாணவி மாளவிகாவுக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மாளவிகா குடும்பத்தினர், 120 சவரன் தங்கம் மற்றும் 10 லட்சம் ரொக்கம், சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.


திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் பிரபாகரன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.


திருமணமான சில மாதங்களில் வாழ்க்கையை இழந்த மாளவிகா கைம்பெண்ணாக, தனது பெற்றோர் வீட்டுக்கே திரும்பிச் சென்றுள்ளார். அவருக்கு சீதனமாகக் கொடுத்த நகை மற்றும் பணத்தையும் சண்டை போட்டு பெண் வீட்டார் திரும்பி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரதட்சணையாக வழங்கப்பட்ட 120 சவரன் நகையையும், 10 லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்ற நினைத்த மணமகன் பிரபாகரன் வீட்டார், பிரபாகரனின் தம்பியான பிரகாஷ் என்பவரை மாளவிகாவுடன் செல்பேனில் மூலம் பேசி காதல் வலையில் விழ வைத்தனர்.

மேலும் பிரகாஷ். தான் புதிய வாழ்க்கை தருவதாகவும் , அண்ணனை விட நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் மாளவிகாவிடம் ஆசைவார்த்தை கூறினார். ஆனால் இவர்களின் காதலுக்கு மாளவிகா பெற்றோர் ஒப்பு கொள்ளாத நிலையில் வீட்டை மீறி பிரகாஷை கோவிலில் வைத்து மாளவிகா திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தான் திருமணமான சில மாதங்களில் மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது திருமணம் முடிந்த சிறிது நாளிலேயே வரதட்சணை பணத்தை வாங்கி வர கூறி மாளவிகாவை அவர் கணவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்தினர், இதனால் கணவர் மற்றும் குடும்பத்தாரின் சுபரூபத்தை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து மகளின் வாழக்கைக்காக 80 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் ரொக்கத்தை மாளவிகாவின் பெற்றோர் மீண்டும் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதனை ஏற்காமல் மீதமுள்ள நகையையும் பணத்தையும் வாங்கி வரச்சொல்லி மாளவிகாவை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாளவிகா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பெண் வீட்டார் பொலிசில் புகார் அளித்ததோடு தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

புகாரை தொடர்ந்து பிரகாஷையும் அவனது தந்தை தலையாரி பாண்டியையும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பொலிசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.