ஊருக்குச் சென்ற கணவருக்கு உறவினர்களால் நேர்ந்த விபரீதம் : கதறும் இளம் மனைவி!!

648


தமிழகத்தில்..


தமிழகத்தில் கணவரை அவரது குடும்பத்தினரே கொ.ன்றதாக கூறி புகார் அளித்துள்ளார் இளம் பெண் ஒருவர். வேறு சமூகத்தில் தம்மை திருமணம் செய்து கொண்டதாலையே கணவரை அவரது உறவினர்கள் கொன்றதாக குறித்த பெண் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிறந்த பிஞ்சு குழந்தையுடனே அவர் திருவள்ளூர் காவல் நிலையத்தில் நேரடியாக சென்று புகார் அளித்துள்ளார். ரயில் பயணத்தினிடையே பார்த்து பழகிய இருவரும் பின்னர் காதலில் விழுந்துள்ளனர். இருவேறு சமூகம் என்பதால் இவர்களின் திருமணத்திற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இருப்பினும் திருமணம் செய்து கொண்ட இருவரும் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஆனாலும், கணவர் கெளதம் தமது குடும்பத்தினரை சந்திக்க அவ்வப்போது சொந்த ஊருக்கு சென்று வருவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.


இதனிடையே, ஆவூர் பகுதிக்கு குடிபெயர்ந்த இந்த தம்பதிக்கு செப்டம்பர் 17ம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ளது. அன்றைய தினம் குடும்பத்தில் ஒரு இறப்பு என தகவல் தெரியவர கெளதம் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து அவர் வீடு திரும்பாததுடன், அவர் மொபைல் போனும் செயல்படாதது கண்டு பயந்து போன அவர், தமது கணவரை தேடி ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் ஊர் முழுக்க கெளதம் இறந்ததற்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அவரை வரவேற்றுள்ளது.

செப்டம்பர் 17, இரவு 7 மணிக்கு இறந்ததாகவும் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது. கணவரின் மரணத்தை போஸ்டர் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய துரதிர்ஷ்டம் ஏற்பட்டதாக கூறி உடைந்து போன அவர், தமது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் துறையை நாடியுள்ளார்.