நடிகர் கமல்-வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருது : குடியரசுத் தலைவர் வழங்கினார்!!

807

Kamal

நடிகர் கமலஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது.

குடியரசுத்லைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

அதன்படி கலைஞானி கமலஹாசனுக்கு பத்ம பூஷன் விருதை பிரணாப் வழங்கினார். கவியரசு வைரமுத்துவுக்கும் இவ்விழாவில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.