கொரோனா மூன்றாவது அலை கண்ணுக்கு தெரியும் எல்லைக்குள் வந்துள்ளது : மருத்துவர் தகவல் !!

1331

கொரோனா..

கொரோனா மூன்றாவது அலை கண்ணுக்கு தெரியும் எல்லைக்கு வந்துள்ளதாக கோவிட்-19 தொடர்பான இணைப்பதிகாரியும் சுகாதார அமைச்சின் தொழிநுட்ப சேவைகள் பணிப்பாளருமான மருத்துவர் அன்வர் ஹம்தானி(Anvar Hamdani) தெரிவித்துள்ளார்.

நாட்டை திறப்பதற்காக அறிமுகப்படுத்த எண்ணியுள்ள சுகாதார வழிக்காட்டல்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் தினமும் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 300 என்ற வரையறை நெருங்கி உள்ளதாக கூறியுள்ள ஹம்தானி,

கோவிட் மரணங்கள் 40 வீதமாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிக்கான பிரதான காரணம் தடுப்பூசி எனவும் தடுப்பு வழங்கும் நடவடிக்கைகள் உலகில் ஏனைய நாடுகளை தாண்டி மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

கோவிட் வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் மக்கள் தமது சமூக பொறுப்பை சரியாக நிறைவேற்றியமை கோவிட் பரவலை தடுக்க ஏதுவான மற்றுமொரு பிரதான காரணமாகும்.

இவ்வாறு சமூக பொறுப்பை நிறைவேற்றிய மக்களை பாராட்டுகிறேன். நாடு திறக்கப்பட்ட பின்னரும் மக்கள் அந்த சமூகத்தை தொடர்ந்தும் நிறைவேற்றுவது முக்கியமானது.

அப்படியில்லை என்றால், மற்றுமொரு கொடி கோவிட் அலை ஏற்படுவதை தடுக்க முடியாது. தடுப்பூ காரணமாக மக்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது.

நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் ஒக்சிஜன் தேவைப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது எனவும் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.