வவுனியாவில் வறுமையிலும் தினமும் 40 கிலோமீற்றர் பயணித்து பாடசாலை செல்லும் மாணவி படைத்த சாதனை!!

7246

தனுசிகா சந்திரசேகரன்..

2020ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் நேற்றையதினம் (23.09) வெளியாகிய நிலையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி தனுசிகா சந்திரசேகரன் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்று (8A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வவுனியாவில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான தட்டான்குளம் பிரதேசத்திலிருந்து தினமும் பேரூந்தில் 40 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து இம் மாணவி இச் சாதனையை படைத்துள்ளார்.

மிகவும் வ.றுமையான குடும்பத்தில் ஒரு மூத்த சகோதரன் மற்றும் இரு இளைய சகோதரிகளுடன் பிறந்த தனுசிகாவின் அம்மா வீட்டு வேலைகளை கவனித்து வரும் நிலையில், தந்தை கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் மிகவும் சி.ரமக்களுக்கு மத்தியிலேயே தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கல்விகற்க அனுப்பி வருகின்றார்.

இருப்பினும் வறுமை மற்றும் பல்வேறு சி.ரமங்களை தாண்டி தனுசிகா இச் சாதனையை படைத்துள்ளார். சாதனைக்கு வறுமை ஒரு த.டையல்ல என்று நிரூபித்துள்ள இம் மாணவி அனைத்து மாணவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் மிகையல்ல.

இம் மாணவி வாழ்வில் பல்வேறு சாதனைகளை படைக்க வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் பெருமையடைகின்றோம்.