
நடிகை லட்சுமி மேனன் இதுவரை நடித்து வெளியான படங்களில் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார். தற்போது விஷாலுடன் மீண்டும் இவர் ஜோடி சேர்ந்திருக்கும் நான் சிகப்பு மனிதன் படத்தில் இதுவரை யாரிடமும் காட்டாத நெருக்கமும், ஓவர் கவர்ச்சியும் காட்டியுள்ளாராம்.
இப்படத்தில் விஷாலும் இவரும் உதட்டு முத்தம் கொடுப்பது போன்று ஒரு காட்சியும் இடம்பெற்றிருக்கிறதாம். இதை விஷாலும், லட்சுமிமேனனும் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் முடிவடைந்து தணிக்கை குழுவினரிடம் சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட அந்த முத்தக்காட்சி படத்தில் இடம்பெற வேண்டுமென்றால் படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். முத்தக்காட்சியை எடுத்துவிட்டால் படத்திற்கு யு சான்றிதழ் அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் குறிப்பிட்ட அந்த முத்தக்காட்சியை நீக்குவதா அல்லது அப்படியே விட்டுவிடுவதா என்ற குழப்பத்தில் படக்குழுவினர் உள்ளனர். அந்த முத்தக்காட்சிதான் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் நம்புகின்றனர். எனவே, அந்த காட்சியை நீக்கலாமா வேண்டாமா என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.





