வவுனியாவில் ஊரடங்கை மீறி திறந்திருந்த மேலும் 8 வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தல்!!

1744

வர்த்தக நிலையங்கள்..

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதாக வவுனியாவில் மேலும் 8 வியாபார நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.

கோவிட் பரவல் வவுனியாவில் தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படல் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது செயற்படல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வவுனியாவில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றினை சுகாதாரப் பிரிவினர் இன்று (25.09) முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மக்களை ஒன்று கூட்டி வியாபாரத்தில் ஈடுபட்டட வர்த்தக நிலையங்கள் சுகாதாரப் பிரிவினரால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

அந்தவகையில் தர்மலிங்கம் வீதியில் மூன்று புடவை கடைகள், ஹொரவப்பொத்தானை வீதியில் மரக்கறி கடை ஒன்றும், கந்தசாமி கோவில் வீதியில் காலணிக்கடை ஒன்றும், பழைய பேரூந்து நிலையத்தில் தொலைபேசி விற்பனை நிலையம் இரண்டும், கண்டி வீதியில் பிரபல தனியார் இலத்திரனியல் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றும் என 8 வர்த்தக நிலையங்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டன.

அத்துடன், நேற்றும் (24.09) ஹொரவப்பொத்தானை வீதியில் இறைச்சி விற்பனை நிலையம், தளபாட விற்பனை நிலையம், சந்தை உள்வட்ட வீதியில் பல்பொருள் விற்பனை நிலையம், பசார் வீதியில் விற்பனை நிலையம் ஒன்று என 4 வியாபார நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.