மேற்கிந்திய தீவுகளுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை அணி??

254

SLT20 உலகக் கிண்ண தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் மோதும் தகுதியை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றிபெற்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதன்படி நாளை 3ம் திகதி இடம்பெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளும் 4ம் திகதி இடம்பெறவுள்ள 2வது அரையிறுதிப் போட்டியில் இந்திய – தென்னாபிரிக்க அணிகளும் மோதவுள்ளன. இறுதிப் போட்டி எதிர்வரும் 6ம் திகதி இடம்பெறவுள்ளது.

கடந்த முறை T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மோதிய இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய நிலையில் இம்முறை இவ்விரு அணிகளும் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

கடந்த முறை மேற்கிந்திய தீவுகள் அணியுடன் தோல்வியை தழுவிய இலங்கை அணி இம்முறை பதிலடி கொடுக்குமா அல்லது மேற்கிந்திய தீவுகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.