வவுனியாவில் வீதியோர வியாபாரங்களில் சனநெரிசல் அதிகமாக இருந்தால் கடும் நடவடிக்கை!!

1038

இ.கௌதமன்..

வீதியோர வியாபாரங்களில் சனநெரிசல் காணப்படுமாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையில் இன்று (01.10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நகர அபிவிருத்தி அதிகார சபையின் 100 நகர உருவாக்க திட்டதின் கீழ் வவுனியாவில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து வைத்தியசாலை சுற்று வட்ட வீதி வரைக்கும் நடைப்பாதைக்கான திட்டம் உருவாக்கப்பட்டது.

அந்த திட்டதற்கு அனுமதி கிடைத்துள்ளது. அதற்கான கேள்வி கோரலும் இடம்பெற்றுள்ளது. மிக விரைவில் அந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் தற்போது மக்கள் வழமையான நிலைக்கு திரும்பியுள்ளார்கள். கோவிட் இறப்புக்கள் குறைவடைந்துள்ளன.

வீதியோர வியாபாரங்கள் நடைபெறுகின்றது. சதொச காணப்படும் உள்வட்ட வீதி பகுதியில் சன நெரிசல் அதிகமாக இருக்கிறது. சில வீதியோர வியாபாரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கோவிட் கட்டுப்பாட்டுக்காக இவ்வாறான நிலமைகள் காணப்படும் போது கடுமமையான நவடிக்கை எடுக்கப்படும்.

பல்வேறு கஸ்ரங்களுக்கு மத்தியில் கோவிட் மரணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நாம் தொடர்ந்தும் தக்க வைத்து முன்னோக்கி செல்ல வேண்டும்.

அதற்கு மக்கள் சுகாதார நடைமுறைளைப் பின்பற்றி நகரசபையின் செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.