நடுவரின் தீர்ப்பை எதிர்த்த டில்ஷானுக்கு 20 வீத அபராதம்!!

520

Dilshan

இலங்கை அணியின் வீரர் திலகரட்ண டில்ஷானுக்கு போட்டிக் கொடுப்பனவில் 20 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் சட்டத்திட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் டில்ஷானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில் நடுவரின் தீர்ப்புக்கு டில்ஷான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றம் புரிந்தவர் என இனங்காணப்பட்ட நிலையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.