வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சிறுவர் தினமும் மர நடுகையும்!!

1282

சிறுவர் தினமும் மர நடுகையும்..

‘எல்லாவற்றிலும் சிறுவர்ககளுக்கு முன்னுரிமை’ என்னும் தொனிப் பொருளில் சிறுவர் தின நிகழ்வும், மரநடுகையும் வவுனியா வேப்பங்குளம் அன்பகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.கெனடி தலைமையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று (01.10.2021) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

எல்லாவற்றிலும் சிறுவர்களுக்கு முன்னுரிமை எனும் தொனிப் பொருளில் நாடு முழுவதும் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதற்கமைவாக வவுனியாவிலும் மாவட்டத்தின் பிரதான சிறுவர் தின நிகழ்வு வேப்பங்குளம் அன்பகத்தில் கொண்டாடப்பட்டது.

இதன்போது வேப்பங்குளம் சிறுவர் இல்ல வளாகத்தில் அதிதிகளால் மா, பலா, நெல்லி, கொய்யா போன்ற பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டதுடன், சிறுவர்களும் மர நடுகையில் ஈடுபட்டனர்.

மரங்கள் வளர்ந்து பயன் தருவது போல் சிறுவர்களும் வளர்ந்து நாளைய தலைவர்களாக செயற்பட வேணடும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.சுபாஜினி, அன்பக முகாமையார் சாமி அம்மா உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.