இலங்கை பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

1767

முக்கிய அறிவித்தல்..

இலங்கையின் அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்துமாறு குழந்தைகளுக்கான சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல ஆலோசகர் தீபால் பெரேரா(Deepal Perera) கேட்டுக்கொண்டுள்ளார்.

பிள்ளைகளுக்கான தடுப்பூசித் திட்டம், இலங்கையின் பிற பகுதிகளில் தடுப்பூசி இயக்கத்துக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 83 சதவீதமானோருக்கு தடுப்பூசி போட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் பரவுவதைத் தடுக்கிறது. “12 வயதுக்குட்பட்ட ஆரம்பப்பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க இன்னும் பரிந்துரை செய்யப்படவில்லை.

12 முதல் 19 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு, கோவிட் வைரஸுக்கு எதிரான பாதுகாப்பாக, ஃபைசர் தடுப்பூசிகளை வழங்குவது ஏற்கனவே சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த இயக்கம் தொடங்கும், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி திட்டங்களின் போது அவசரமோ சிக்கலோ இல்லை. அனைத்து வைத்தியர்களும் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு மிக நெருக்கமான மருத்துவ உயர்தர சேவையை பராமரித்து வருகின்றனர்.

பிள்ளைகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு நன்றாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் பெரேரா கூறியுள்ளார்.