20 ஓவர் உலக கிண்ண சுற்றுத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 7 மணிக்கு பங்களாதேஷின் டாக்கா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த முறை இடம்பெற்ற 20 ஓவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. கொழும்பில் இடம்பெற்ற இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.
அதனால் அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இலங்கை அணி இன்று களமிறங்கும். இரு அணிகளுக்கு சமபலத்தில் இருப்பதால் விறுவிறுப்பான போட்டி ஒன்றை ரசிகர்கள் காணலாம்.
இலங்கை அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. நடப்பு சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது.
தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.





