முடங்கிய பேஸ்புக் : 121.6 பில்லியன் ரூபா வீழ்ச்சி : 5ம் இடத்திற்கு தள்ளப்பட்ட Mark Zuckerberg!!

716


முடங்கிய பேஸ்புக்..


சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன நேற்று இரவு முதல் சுமார் ஆறு மணி நேரங்கள் சர்வதேச ரீதியில் செயலிழந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் வழமைக்கு திரும்பியிருந்தன.இந்த நிலையில் பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஸக்கர்பேர்க்கின் (Mark Zuckerberg) தனிப்பட்ட சொத்து 7 பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனையடுத்து அவர் உலக செல்வந்தர்கள் பட்டியலில் ஒரு இடம் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பட்டியலில் மார்க் ஸக்கர்பேர்க்கை ஐந்தாவது இடத்திற்கு பின்தள்ளி பில் கேட்ஸ் (Bill Gates) நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் தெரியவருகிறது.


அத்துடன் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 4.9 சதவீதத்தினால் சரிவை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதனபடி 121.6 பில்லியன் ரூபா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சர்வதேச ரீதியில் இந்தத் தடையானது, இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வி என செயலிகளின் சேவைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து கண்காணிக்கும் டவுன் டிடெக்டர் (Down Detector) தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.