ராஜீவ் கொலை குற்றவாளிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தல்!!

747

Rajiv

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

இதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, சிறையில் இருந்த காலத்தை ஆயுள் தண்டனை காலமாகக் கருதி உடனடியாக இந்த மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.