வவுனியாவில் “ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம்” எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!

1539

ஆர்ப்பாட்டம்..

ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து வவுனியா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்திற்கு முன்பாக ஒண்ணினைந்த அதிபர், ஆசிரியர்கள் தொழிற் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று (06.10) காலை 10 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சரனக்கு உடனடியாக தீர்வை வழங்கு, இலவசக் கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கு, அரசே இலவச கல்வியை தனியார் மயப்படுத்தாதே,

அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனைக்கு தீர்வை வழங்கி பிள்ளைகளின் கல்வி உரிமையை பாதுகார், அதிபர் ஆசிரியர்களை ஏமாற்றாதே, ஆசிரியர் தினம் எமக்கு கறுப்பு தினம்’ என எழுத்தப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும், இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்துவதை நிறுத்தி சுபோதினி அறிக்கையில் முன்வைக்கப்பட்ட படி உரிய தீர்வை வழங்க வேண்டும்.

எதிர்வரும் 21 ஆம் திகதி கிராமப்புற பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர், ஆசிரியர் சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கினால் மட்டுமே ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்வார்கள்.

ஆசிரியர் கொவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நேர காலம் பாராது சேவை செய்வர். எமது பிரச்சனை தீர்க்கப்படும் வரை தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் எனவும் இதன்போது தெரிவித்தனர்.