கொழும்பு துறைமுகத்தை அடைந்தது உலகின் மிகப் பெரிய சரக்குக் கப்பல்!!

1315

சரக்குக் கப்பல்..

உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பலாக கருதப்படும் Ever Ace கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23,992 கொள்கலன்களை கொண்டு செல்லும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

எவர் கிரீன் (Evergreen) கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த கப்பல் நெதர்லாந்தின் ரோடர்டேம் துறைமுகத்திலிருந்து, கடந்த மாதம் புறப்பட்ட நிலையில் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது.

இது போன்ற பாரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளக்கூடிய 24 துறைமுகங்கள் உலகளாவிய ரீதியில் உள்ள போதும், குறித்த கப்பலானது தெற்காசியாவில் நங்கூரமிடக்கூடிய ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் எனவும் கூறப்படுகிறது.