வவுனியாவில் நடைபெற்ற மூத்த பொதுவுடமைவாதியும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தலைமைத் தோழருமான இ.கா.சூடாமணியின் நினைவு நாள்!!(படங்கள்)

506

மூத்த பொதுவுடமைவாதியும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தலைமைத் தோழருமான இ.கா.சூடாமணியின் 1ம் வருட நினைவுப் பகிர்வு வவுனியா பழைய நகரசபை மண்டபத்தில் தோழர்.நா.பகீரதன் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வு தோழர் சூடாமணியின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது. தொடர்ந்து கவிதை அஞ்சலி தோழி நி.பிரவீனா அவர்களால் பாடப்பட்டு, தோழர் சூடாமணியின் நினைவுப் புத்தகம் வெளியிடப்பட்டது.

இப் புத்தகத்தினை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொருளாளரும், சட்டத்தரணியுமான சோ.தேவராசா அவர்கள் வெளியிட்டு வைக்க அதிதிகள் பெற்றுக்கொண்டனர்.

அதன் பின்னர் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தோழருமான சி.கா.செந்திவேல் “சமகாலச் சூழலில் பொதுவுடமைச் சிந்தனையும் தோழர்.சூடாமணியும்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து “இன்றைய உலகமயமாதலின் கீழ் கல்வி” எனும் தலைப்பில் ஜெர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினரும் சிறந்த சமூக சிந்தனையாளருமான கே.கே.அருந்தவராசா அவர்கள் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அதிதிகளான திரு.கு.சிதம்பரநாதன் (பீடாதிபதி- வவுனியா பூந்தோட்டம் கல்வியல் கல்லூரி), திரு.நடராசா (சண்முகதாசன் கற்கைகளுக்கான நிலையம்), திரு.ந.பார்த்தீபன் (சிரேஷ்ட விரிவுரையாளர்), திரு.ஜெயரட்னா (சூடாமணியின் இளைய புதல்வர்) ஆகியோர் சூடாமணி பற்றி கருத்துரைகளை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து ராகலை பன்னீர், நி.பிரவீனா, திரு.மோகன்ராஜ், கலைச்செல்வி ஆகியோருடைய கவிதா அஞ்சலி இடம்பெற்றது. இறுதியாக சூடாமணி நினைவுக் குழு சார்பாக ஆசிரியர் டொன் போஸ்கோ நன்றியுரையை வழங்கினார்.

1234567121098