வவுனியாவில் நான்கு யானை தந்த கஜமுத்துக்களுடன் மூவர் கைது!!

1551


கஜமுத்து..


வவுனியாவில் யானை தந்த கஜமுத்துக்கள் நான்குடன் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் சோதனையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த வீதியில் பயணித்த சந்தேகத்திடமானவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் யானை தந்த கஜமுத்துக்கள் நான்கு மீட்கப்பட்டன.இதனையடுத்து, குறித்த யானை தந்த கஜமுத்துக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 20 வயதுடைய லியனகமக- மகாவ, 50 வயதுடைய கோயிலகெதர -மகாவ, 50 வயது நிக்கரவெட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.


கைது செய்யப்பட்டவர்களும், அவர்களிடம் மீட்கப்பட்ட யானை தந்த கஜமுத்துக்களும் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதக விசாரணையின் பின் நீதிமன்றில் ஒப்படைக்க பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.