பால் மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்!!

764


பால் மா..


கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் பால் மா விலை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய கட்டுப்பாட்டை விலை நீக்கப்பட்டதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை பாரிய அளவு அதிகரிக்கவுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 350 ரூபாயிலும் 400 கிராம் பக்கட் பால்மாவின் விலை 140 ரூபாயில் அதிகரிக்க வேண்டும் எனவும் பால் மா இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எனினும் வாழ்க்கை செலவு குழுவில் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கட் விலையை 200 ரூபாயில் அதிகரிக்கவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் முடிவிற்கமைய பால்மா விலை தீர்மானிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-