பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீள ஆரம்பிப்பது குறித்து வெளியான புதிய செய்தி!!

1689


பாடசாலை..


நாட்டிலுள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும் மீள ஆரம்பிப்பது குறித்து இன்று புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளையும்,மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் பாடசாலைகள் பல கட்டங்களில் திறக்கப்படும். தொடர்ந்து நவம்பரில் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-