அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 26 இலங்கையர்களை பிடித்து திருப்பி அனுப்பிய இந்திய கடற்படை!!

693

Ausஅவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 26 இலங்கை தமிழர்கள், நடுக்கடலில் இந்திய கடலோரக் காவல்படையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்ற 26 தமிழர்களிடமும் அந்தமான் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வேலை தேடிச் செல்வதாகவும், இதற்காக படகோட்டிக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் அந்தமானில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.