வவுனியா ஓமந்தை அரச வீட்டுதிட்டத்தில் இடம்பெற்று வந்த கிராமிய வழிபாட்டு முறையை மீண்டும் ஏற்படுத்தக் கோரிக்கை!!

1842


ஓமந்தை அரச வீட்டுதிட்டத்தில்..


வவுனியா, ஓமந்தை அரச வீட்டுத் திட்டத்தில் கடந்த 6 வருடங்களாக பக்தி பூர்வமாக இடம்பெற்று வந்த கிராமிய வழிபாட்டு முறையை மீண்டும் ஏற்படுத்தி தருமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசனிடம் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டு வந்த 85 குடும்பஙகள் கையெப்பமிட்ட மகஜர் ஒன்றும் கையளிக்பகப்பட்டுள்ளது. குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,பக்தி பூர்வமாக இடம்பெற்று வந்த வழிபாட்டு முறையை மீண்டும் ஏற்படுத்தக் கோருக்கின்றோம். அதனடிப்படையில், கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத் திட்டத்தில் உள்ள ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தில் பின்பற்றிவந்த வழிபாட்டு முறையை இல்லாது ஒழித்தமை,

பக்தி பூர்வமாகவும் முறைப்படியும் ஆரம்பத்தில் இருந்து பூசகராக கடமையாற்றி வந்த சு.வரதகுமார் அவர்களை வெளியேற்றியமை, இவ்வாறான பாரிய மாற்றத்தை பொதுக்க கூட்டம் ஒன்றை கூட்டாமலும்,


பெரும்பாலன வழிபடுபவர்களின் அபிப்பிராயங்களை கேட்காமலும், நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலரின் தன்னிச்சையான முடிவுடன் மேற்கொள்ளப்பட்டமை முறைகேடானது.

ஆலயம் ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து இன்று வரை வழிபட்டு வரும் ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தை இடிக்க முயலும் முடிவு மனவருத்தைத்தையும், மனப்பயத்தையும் தருகின்றது.


பாரிய பொருட் செலவில் அமைக்கப்பட்ட கோயிற் கிணற்றை இடித்து மூடிவிட முயல்கின்றமை, நாம் வசிக்கும் குடியிருப்பில் பாம்பினால் ஏற்பட்டு வந்த அச்சத்தைக் போக்க அனைத்து மக்களாலும், விரும்ப உருவாக்கபடபட்ட நாகதம்பிரான் பூசை முறையை நீக்கியமையும்,

அதற்கான வழிபடுநிலையமான புற்றை நீக்க முயற்சி செயது வருகின்றமை ஆகிய செயற்பாடுகளை வழிபடும் நாம் எதிர்கின்றோம் என தெரிவித்து 85 பேரின் கையொப்பங்களுடன் குறித்த மகஜர் வழங்கப்பட்டுள்ளது.