மருந்து வாங்க சென்ற தம்பதிக்கு குடும்பத்தினர் கண்முன்னே நடந்த கொடூரம்!!

637


இந்தியாவில்..


இந்தியாவில் மருந்து வாங்க சென்ற தம்பதி சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் டேனியல் (45).இவரது மனைவி நிர்மலா (34). டேனியல் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று உடல்நலம் சரியானதும் சொந்த ஊருக்கு வந்து செல்லலாம் என்று நினைத்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஊருக்கு வந்துள்ளார்.


மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தினத்தன்று டேனியல், அவரது மனைவி, மகள்கள், உறவினர்கள் என அனைவரும் காரில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்குள்ள மருந்தகத்தில் மருந்து வாங்க டேனியல் மற்றும் அவரது மனைவி நிர்மலா இருவரும் சென்றுள்ளனர். மருந்தை வாங்கிவிட்டு தம்பதிகள் சாலை கடக்கும் பொழுது அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் அவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய இருவரும் குழந்தைகள் கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வாகனத்தை இயக்கி வந்தவர் தப்பித்த நிலையில் வாகனம் பறிமுதல் செய்து பொலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.