உலக சாதனையொன்றை நிலைநாட்டும் முயற்சியில் மாத்தளையை சேர்ந்த நபர்!!

945


முஹமது மஷ்சுன் முசாதிக்..


உலக சாதனையொன்றை நிலைநாட்டும் முயற்சியில் மாத்தளை – கோன்காவில பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான முஹமது மஷ்சுன் முசாதிக் என்ற நபர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆறு அடி ஆழமான குழியொன்றுக்குள் இறங்கி, அதற்கு மேல் தீயிட்டு ஆறு மணித்தியாலங்கள் தன்னால் ஆபத்து இன்றி குழிக்கு உள்ளே இருக்க முடியும் என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.


உலகில் எவரும் இவ்வாறான ஓர் முயற்சியை செய்தது இல்லை எனவும், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இதனை தான் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த நபர் ஏற்கனவே நண்பர்களுடன் இணைந்து பல தடவைகள் இவ்வாறு பரீட்சார்த்த அடிப்படையில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் கமராக்களைக் கொண்டு நண்பர்களின் உதவியுடன் 2 மணித்தியாலங்களுக்கு மேல் ஆறு அடி ஆழமான குழியில் இறங்கி அதன் மேல் தீயிடச் சொல்லி குழியில் இருந்ததாகத் தெரிவிக்கின்றார். இது குறித்த காணொளி ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என அவர் குறிப்பிடுகின்றார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் குழியொன்றில் இறங்கி மண்ணால் மூடி 21 நிமிடங்கள் குழியில் இருந்ததாகவும் இதுவே உலக சாதனையாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார். எனினும், தமது உலக சாதனை முயற்சியானது மேலே தீயிட்டு குழிக்குள் இருப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார்.