இலங்கை மக்களுக்கு அடுத்தடுத்து பேரிடி!!

1441


ஹோட்டல் உணவு வகை..


இலங்கையில் ஹோட்டல் உணவு வகைகளின் விலைகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, கோதுமை மா, பால் மா உள்ளிட்ட பொருட்களின்,விலை அதிகரிப்பு காரணமாக ஹோட்டல் உணவு வகைகளின் விலைகளும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஒன்றியத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


உணவுப் பொதி (lunch packet), ப்ரைட் றைஸ் (fried rice), கொத்து (kottu), பால் தேனீர் உள்ளிட்டனவற்றின் விலைகள் நாளை முதல் 10 ரூபாவினால் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.