வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் பொலிசார் திடீர் சோதனை : 10 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

2439


திடீர் சோதனை..


சுகாதார நடைமுறைகள் குறித்து வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் பொலிசார் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், 10 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரப் பிரிவினரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக பொலிசார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், வவுனியா புகையிரத நிலைய வீதி, குருமன்காடு ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த பொலிசார் முக்கவசம் அணியாது வர்த்த நிலையங்களில் பணிபுரிந்தோர், முககவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.


இதன்படி 10 வர்த்தகர்களுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் முற்படுமாறும் பொலிசாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.