எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் விபத்து : சாராதி படுகாயம்!!

1128


விபத்து..


திருகோணமலையிலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையில் அமைந்துள்ள இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்திலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான குறித்த வாகனமானது, வீதியின் அருகிலுள்ள பாலம் ஒன்றினை உடைத்துக்கொண்டு திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் தடம்புரண்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.