மரண அறிவித்தல் : ராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை!!

2908

கரம்பொன், ஊர்காவற்துறையை பிறப்பிடமாகவும் குருமன்காடு வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட யாழ்ப்பாணம் கரம்பன் சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராகவும் உப அதிபராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்ற ராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை அவர்கள் நேற்று முன்தினம் (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சவரிமுத்து அந்தோனிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும் ஜெரால்ட் ஜோசப் பயஸ், ரெஜினோல்ட் மைக்கல், இயூஜின் மசினால்ட் வெனீசியஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரதினா பெலிஷியா, இந்திராணி, சசிகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் லவலோஜிதா, கீர்த்திகா, பிரெவின், நிரஞ்சன், பிரித்திவி, மோனிஷா, கனிஸ்ரன், டிலான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் பிரஜனின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று 12.10.2021 செவ்வாய்க்கிழமை அன்று கொவிட் நடைமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்பட்டது.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.