இப்படியும் ஓர் மர்மமான ஏரி : இங்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை.. சினிமாவை மிஞ்சும் திகில் கதை!!

1510


மர்ம ஏரி..மியான்மரில் உள்ள ஏரி ஒன்றில் மர்மமான திகில் சம்பவங்கள் நடப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் எல்லைக்கு அருகில் இந்த மர்மமான ஏரி அமைந்துள்ளது.இது நவாங் யாங் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த ஏரியை பற்றி நாம் யாரும் கேள்விபட்டிருக்க மாட்டோம். அங்கு வசிக்கும் மக்கள் எந்த ஏரிக்கு சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததில்லை என்று கூறுகின்றனர்.
இரண்டாம் உலக போரின் போது இந்த ஏரிக்கு அருகில் அமெரிக்க விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறங்கியுள்ளது. ஆனால் அதன் பிறகு விமானம் மற்றும் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாயமாய் மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.


அதே போல் இன்னொரு சம்பமும் நடந்துள்ளது. இரண்டாம் உலக போர் முடிந்த பிறகு ஜப்பானிய வீரர்கள் நாடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அந்த ஏரிக்கு அருகே வந்தபோது வழி தவறி மறைந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

ஆனால் இந்த ஏரியை சுற்றி வசிக்கும் கிராம மக்கள் வேறொரு கதையை கூறுகின்றனர். பல வருடங்களுக்கு முன்பு ஓரி கிராமவாசி ஒரு பெரிய மீனை ஏரியில் இருந்து பிடித்துயுள்ளார்.


இதனால் அவர் முழு கிராமத்தையும் விருந்துக்கு அழைத்துள்ளார். ஆனால் ஒரு வயதான பாட்டி மற்றும் பேத்தி மட்டும் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை.

இதனால் கோபமடைந்த அவர் அந்த இரண்டு பேரையும் கிராமத்தை விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளார். அடுத்த நாளே கிராமம் முழுவதும் ஏரியில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆய்வாளர்கள் ஏரியின் உண்மையான மர்மத்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.