இன்ஸ்டாகிராம் குழுவினால் இலங்கையில் நடந்த பாரிய மோசடி!!

392


இலங்கையில் ஒன்லைனில் பொருட்களை வாங்க மற்றவர்களின் வங்கி அட்டைகளின் எண்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கை ஒன்றை குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


அரச வங்கி அட்டை பிரிவின் பிரதான முகாமையாளர்களின் முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பில் குருநாகல் தம்பொக்க பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரை குற்ற விசாரணை திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.சந்தேக நபர் ஒரு இன்ஸ்டாகிராம் குழுவின் உதவியுடன் மூன்று நாட்களில் 29 பேரின் வங்கிக் கணக்குகளில் 114 முறை பொருட்கள் கொள்வனவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களில் 841000 ரூபாய் மோசடி செய்துள்ள இந்த நபர் நாடு முழுவதும் உள்ள மக்களின் வங்கி கணக்கிற்குள் மோசடியான முறையில் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்த விசாரணைகளுக்கமைய இன்ஸ்ட்ராகிராம் ஊடாக இயங்கும் குழுவொன்றினால் வங்கி கணக்குகளில் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த குழுவில் உள்ள அனைவரும் யாருடைய அடையாளமும் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதற்காக வேலை செய்துள்ளனர். குழுவின் உறுப்பினர் ஒருவர் வங்கி அட்டை எண்களின் மோசடி பயன்பாடு குறித்து முழு குழுவினருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.


பொது மக்களின் வங்கி அட்டையின் இலக்கம் மற்றும் இறுதி 3 இலக்கங்களை திருடி இந்த மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இளைஞன் மோசடியான முறையில் கொள்வனவு செய்துள்ள கணினி, கையடக்க தொலைபேசி, பாதணி உட்பட பொருட்கள் சந்தேக நபரின் அறையில் மீட்கப்பட்டுள்ளன.