திருமணம் நடைபெறவிருந்த தம்பியை கொலை செய்த அண்ணன்!!

1221


ஸ்டீவன் ராஜ்..


குடும்பத் தகராறு காரணமாக தன் உடன்பிறந்த தம்பியை, மூத்த சகோதரன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் மாத்தளைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்றைய தினம் தெரிவித்துள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் திக்கிரியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஸ்டீவன் ராஜ் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்தக் கொலையுடன் தொடர்புடைய மூத்த சகோதரன் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


உயிரிழந்த இளைஞருக்கு இம்மாதம் 21ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.