
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நக்மா, என்னைத் தொடவோ, முத்தம் கொடுக்கவோ முயன்றால், அது யாராக இருந்தாலும் அவரை அடிப்பேன் என்று கூறியுள்ளார்.
நக்மா தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆரம்பித்ததில் இருந்து, அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் வழிகிறது.
இது கட்சிக்கு நல்ல செய்தியாக இருந்தாலும், கூட்டத்தில் பலரும், நக்மாவை தொட்டுப் போர்க்கவும், சிலர் முத்தமிடவும் விரும்பி அவரை நெருங்குகின்றனர்.
கடந்த வாரம் முத்தம் கொடுக்க வந்த ஒரு இளைஞரை நக்மா கன்னத்தில் அறைந்தது மிகப்பெரிய செய்தியானது.
இந்த நிலையில் எனக்கு முத்தம் கொடுக்க முயன்றால் அவர்கள் யாராக இருந்தாலும் அடிப்பேன் என்று நக்மா ஆவேசமாகப் பேசியுள்ளார்.




